வெள்ளி தட்டுடன் மாட்டுவண்டியில் தாய்மாமன் கொண்டு வந்த சீர்: வாயடைக்க வைத்த காணொளி
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் தனது சகோதரி மகளின் பூப்புனித விழாவில் தாய்மாமா செய்த சீர்வரிசை பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
இந்திய மாநிலமாக தமிழ்நாட்டில் சீர்வரிசை என்பது மிகவும் முக்கியமான நிகழ்வாக காணப்படுவதுடன், உறவினர்கள் மத்தியில் தரத்தினையும், கவுரவத்தையும் நிர்ணயிக்கின்றது.
இதில் பெண் பூப்படைந்த விழாவில் தாய்மாமன் செய்யும் சீர் வேறலெவல் என்று தான் கூற வேண்டும்.
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மகள் பூப்புனித விழாவினை திருமண மண்டபம் ஒன்றில் வைத்துள்ளார்.
தனது சகோதரியின் மகள் பூப்படைந்த விழாவிற்கு வேலுச்சாமி, சதீஷ் உள்ளிட்ட தாய்மாமன்கள் அந்த கால வழக்கப்படி, பண்பாட்டை நினைவூட்டும் வகையில் ஏழு இரட்டை மாடு வண்டிகளை பூட்டி கொண்டு சீர் கொண்டு வந்ததுள்ளனர்.
உறவினர்கள் படை சூழ தேங்காய், பழம் என 25 வகையான சீர் தட்டுகளை எடுத்து கொண்டு, மேளதாளங்கள் முழங்க குன்னத்தூரிலிருந்து திருமண மண்டபம் சுமார் ஐந்து கி.மீ தூரம் மாட்டுவண்டிகளில் தாய்மாமன் சீரினை எடுத்து வந்துள்ளனர்.
மண்டபத்திற்குள் நுழையும் தருணத்தில் சகோதரி ஆரத்தி எடுத்து சகோதரனை அழைத்தச் சென்றுள்ளார். மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டது. பழைய கால வழக்கப்படி இவ்வாறு மாட்டுவண்டியில் சீர் கொண்டுள்ளது ஊரையே வியப்பிற்குள்ளாகியுள்ளது.
ஆனால் கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் தனது தங்கையின் பூப்புனிதா விழாவிற்கு தாய் மாமன் சீராக 100 கார்களிலும், 15 மாட்டு வண்டிகளிலும், சீர்வரிசை பொருட்களை ஏற்றிக் கொண்டு, அதில் முதல் மாட்டுவண்டியை ராஜாவே ஓட்டிவந்தது குறிப்பிடத்தக்கது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்.



