மாஸ்டர் திரைப்படத்தில் இயக்குனர் செய்த காரியம்... புகைப்படம் வெளியிட்டு ரசிகர்கள் செய்த வேலை
விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படம் கடந்த மாதம் 13ம் தேதி திரையரங்கில் வெளியாகி வசூலில் சாதனையை நிகழ்த்தியுள்ளது. சுமார் 10 மாதங்கள் கழித்து இந்தப் படம் வெளியானதால், பல்வேறு வெளியீட்டுச் சிக்கல்களைச் சந்தித்தது 'மாஸ்டர்' படக்குழு. OTT தளங்களில் படம் வெளியான பிறகும் பெரும்பாலான திரையங்குகளில் மாஸ்டர் படம் இன்னமும் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது.
காரணம் திரையரங்கில் பார்ப்பதையே ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். மேலும் இப்படத்தில் இயக்குனர் செய்து சில சில விடயங்கள் ரசிகர்களை பெரிதும் பிரமிக்க வைத்ததோடு, பாராட்டினையும் குவித்து வருகின்றனர். ஆம் இப்படத்தில் விஜய் மெட்ரோ ரயிலில் சண்டையிடும் போது "மெட்ரோ ட்ரெய்ன் விட்டதில் இருந்து ஏறனும்ன்னு நெனச்சிட்டு இருக்கேன்.
இப்போ தான் ஏற முடிஞ்சது.. நல்லா இருக்குல.. தேங்க்ஸ் பா.." என்று கூறுவார். இந்த நன்றியை இயக்குனருக்கு கூறினாராம். அதனை அப்படியே இயக்குனர் சற்றும் யோசிக்காமல் படத்தில் கொண்டு வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இதில் சிறுவர் சீர்திருத்த பள்ளி நாகர்கோவிலில் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.
படம் முழுவதும் சென்னையில் எடுக்கப்பட்டாலும், நாகர்கோயிலில் நடப்பது போன்று வரும் காட்சிகளில் தோன்றும் வாகனங்கள் கூட நாகர்கோயிலின் பதிவு எண் "TN 74" கொண்டதாகவே தேர்வு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவ்வாறு சிறு சிறு விடயத்தினை அவதானித்த ரசிகர்கள் இயக்குனர் லோகேஷின் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.