மாஸ்டர் பட நடிகருக்கு அஜித் கொடுத்த பரிசு விலைமதிப்பில்லாத பரிசு! பிக்பாஸ் பிரபலத்தின் உருக்கமான புகைப்படம்
மாஸ்டர் படத்தில் நடித்த பிக்பாஸ் பிரபலமான சிபிக்கு அஜித் பரிசு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் சிபி
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யிடம் படிக்கும் மாணவராக நடித்திருந்த சிபி சந்திரன் தற்போது அஜித் நடிக்கும் துணிவு படத்தில் அஜித்துடன் நடித்து வருகின்றார்.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சிபி சந்திரன், கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டார். இவர் இறுதிகட்டம் வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு, பதியிலேயே வெளியேறினார்.
பின்பு அடுத்தடுத்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்த சிபி தற்போது அஜித்துடன் துணிவு படத்தில் அவரது டீம்மேட்டாக நடித்து வருகின்றார். இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.
அஜித் அளித்த பரிசு
நடிகர் சிபி சந்திரனுக்கு அஜித் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். ஆம் துணிவு படத்தில் இடம்பெறும் கசேதான் கடவுளடா பாடல் படப்பிடிப்பின் போது தான், சிபிக்கு நடிகர் அஜித் கண்ணாடி ஒன்றினை பரிசாக கொடுத்துள்ளார். இதனை அணிந்துகொண்டு, இந்த பரிசை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். சிபியின் இந்த பதிவுக்கு, ரசிகர்களிடம் லைக்ஸ் குவிந்து வரும் நிலையில், பாராட்டியும் வருகின்றனர்.