மாஸ்க் அணிவதால் அடிக்கடி தலைவலியா? காரணத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
உலகம் முழுவதும் ஒரு வருடத்தையும் கடந்த ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிற்கு மக்கள் தற்போதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதிலிருந்து தப்பிப்பதற்கு தற்போது தடுப்பூசி அவசியம் என்றும் இதனால் மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியினை போட்டு வருகின்றனர்.
இவ்வாறு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலும், தனி மனித இடைவெளி, மாஸ்க் அணிதல், கைகளை கழுவுதல் என விதிகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
சாதாரண மக்களை விட, மருத்துவதுறையில் இருப்பவர்கள், முன்கள பணியாளர்கள் எப்பொழுதும் மாஸ்க் அணிற்து கொண்டே இருக்கின்றனர். அவ்வாறு மாஸ்க் அணிந்திருப்பவர்களுக்கு மூச்சு விடுவதில் பிரச்சினை ஏற்படுவதோடு, தலைவலி, தாடைவலி, அசௌகரியம், டிஹைட்ரேஷன் போன்ற சிக்கலையும் ஏற்படுத்துகின்றது.
ஆனால் இவ்வளவு சிரமத்தினை நாம் எதிர்கொண்டாலும் மாஸ்க் அணிவதால் நன்மைகள் தான் அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இதனிடையே நல்ல டைட்டான மாஸ்க்கை நீண்ட நேரம் அணிவது கீழ் தாடை எலும்பை மண்டை நம் மண்டை ஓட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் டெம்போரோமான்டிபுலர் ஜாயின்ட்களில் (temporomandibular joint) வழியை ஏற்படுத்துகிறது.
எனவே தாடையை பாதிக்கும் நரம்புகள் மூளைக்கு வலி சிக்கனல்களை அனுப்புகிறது. இதுவே தலை வலிப்பது போல நம்மை உணர வைக்கிறது.
இது போன்ற சூழலை தவிர்க்க காதுகளுக்கு பின்னால் டைட்டாக இருப்பது போன்ற மாஸ்க்குகளை அணிவதை தவிர்த்து கொள்ள வேண்டும். இதனை கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
நாம் செல்லும் இடத்திற்கு ஏற்ப ஓரளவு இறுக்கம் குறைந்த மாஸ்க்குகளை அவ்வப்போது பயன்படுத்தினால், இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும் உங்கள் முகத்திற்கு பொருத்தமான, அதே சமயம் மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்கு கவர் செய்யும் படியான மாஸ்க்குகளை வாங்கி பயன்படுத்துங்கள்.
