தோஷம் நீக்கும் புண்ணிய நாள்- யாரெல்லாம் விரதம் இருக்கலாம்?
உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள், ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் ஆரம்பித்தால் அந்த காரியம் சிறப்பாக முடியும் என பலரும் கூறி கேட்டிருப்போம்.
பாதாளத்தில் இருந்த பூமியை, பெருமாள் வராக அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்த நாள் “மாசி மகம்” என அழைக்கப்படுகிறது. இந்த நாளில் ஸ்ரீ மகாவிஷ்ணு வழிபாடு செய்தால் சிறந்த பலனை பெறலாம்.
மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வாழலாம். சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நாளில் தோஷம் இருப்பவர்கள் பரிகாரம் செய்தால் அவர்களின் தோஷம் நீங்கி, புண்ணியம் வந்து சேரும்.
மாசி மகம் நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவது போன்ற வேலைகளை வழக்கமாக செய்வார்கள்.
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். எனவே இந்த நாளிலில் பித்ருக்கள் வழிபாடு செய்தால் எமது முன்னோர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.
அப்படியானவர்கள் கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்யலாம். அத்துடன் புனித நீராட்டு மற்றும் வழிபாட்டுடன் சில தான தர்மங்களையும் செய்வதால் பாவங்கள் நீங்கி அனைத்து வளங்களும் கிடைக்கப் பெறும். அன்னதானமும் செய்யலாம்.
அந்த வகையில் மாசி மகம் நாளில் என்னென்ன விடயங்களில் அதிகமாக கவனம் செலுத்த வேண்டும் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
