கம கமனு அரைச்சு வச்ச சாம்பார் இப்படி செஞ்சி பாருங்க
அதிகமான இந்தியர்கள் வீட்டில் சாம்பார் செய்வார்கள். இது அனைத்து உணவிற்கும் பக்கவாக பொருந்தும். அதுவும் சுடு சாதத்தில் வைத்து அப்பளத்துடன் பரிமாறினால் சுவை பிரமாதம்.
இதற்கு காயகறிகள் தேவைப்படும். எப்போதும் சாம்பார் செய்யாமல் மசாலா அரைத்து எப்படி சாம்பார் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இந்த சாம்பாறை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். சுவை பிரமாதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்
- துவரம் பருப்பு - அரை கப்
- தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் - 4-5
- தனியா (மல்லி) - 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- வெந்தயம் - கால் டீஸ்பூன்
- புளி - எலுமிச்சை அளவு
- காய்கறிகள் (முருங்கைக்காய், கேரட், கத்தரிக்காய்)
- சின்ன வெங்காயம் - 10
- தக்காளி - 1
- தாளிக்க: கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம்.

செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, தனியா, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம் ஆகியவற்றை வறுக்கவும். இறுதியில் தேங்காய் சேர்த்து லேசாக வறுத்து, ஆறவைத்து பஞ்சு போல அரைத்துக் கொள்ளவும்.
துவரம் பருப்பை நன்கு குழைய வேகவைத்து, கடைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து, காய்கறிகள், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்னர் புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, காய்கறிகள் நன்கு வேகும் வரை கொதிக்க வைக்கவும்.
காய்கறி வெந்ததும், வேகவைத்த பருப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்கவும். கடைசியில் சிறிதளவு நெய்யில் தாளித்து கொட்டினால் மணம் தூக்கலாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |