மே மாதத்தில் செவ்வாய் பெயர்ச்சி: இந்த ஐந்து ராசியினர் நெருப்பா இருப்பாங்களாம்
செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்கு இடம்பெயர்வதால் ஏற்படும் சில சிக்கல்களைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
ரிஷப ராசியினரின் 12ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் மனஅழுத்தம் அதிகரிப்பதுடன், எதிர்பாராத மருத்துவம் மற்றும் பயண செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருக்கு உங்களது உதவிகள் தேவைப்படலாம்.

கன்னி
கன்னி ராசியினரின் 8ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்றதாக இருப்பதால், நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடுவதுடன், உடல்நல நலப் பிரச்சனைகள் அல்லது காயம் ஏற்பட வாய்ப்புள்ளதாம். வாகனம் ஓட்டும்போதும் எச்சரிக்கை இருக்கவும். பணியிட அரசியலில் விலகி இருப்பதுடன், பூர்வ சொத்து சம்பந்தமாக பிரச்சனை வரலாம்.

தனுசு
தனுசு ராசியினரின் 5ம் வீட்டில் செவ்வாய் பயணிப்பதால் இந்த காலக்கட்டம் உங்களுக்கு எரிச்சல் ஏற்படலாம். கோபம் உங்களது வாழக்கையில் சிக்கல்களை உருவாக்கும் என்பதால் பொறுமையாக பேசித் தீர்க்க முயற்சிக்கவும்.

மகரம்
மகர ராசியினரின் 4ம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் அதிக மனஅழுத்தத்தினை ஏற்படுத்தலாம். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுடன், உங்களது நடத்தை பணியிடத்தில் சிக்கலையும் ஏற்படுத்தும். தாயாருடனான உறவில் பதற்றம் ஏற்படலாம். அமைதியாக இருப்பதற்கு முயற்சிக்கவும்.

மீனம்
மீன ராசியினருக்கு 2ம் வீட்டில் செவ்வாய் நுழைவதால், இரண்டுவிதமான பலன்கள் இருக்கலாம். திடீர் பணவரவு இருந்தாலும், உடல்நலத்தில் கவனம் தேவை. உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். துணையின் உடல்நலமும் கவலைக்கு காரணமாக அமையலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |