5 ராசிகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்... ஆகஸ்ட் 18 வரை ராஜயோகம்
சிம்ம ராசியில் செவ்வாய் கிரகம் பெயர்ச்சியாகியுள்ளதால், வரும் 18ம் தேதி வரை அதிர்ஷ்டத்தில் 5 ராசியினர் மூழ்க உள்ளனர்.
சிம்ம ராசியில் செவ்வாய்
ஜோதிடத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு கிரகத்தின் இடப்பெயர்ச்சியும், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும் சில ராசியினருக்கு எச்சரிக்கையும் அளிக்கின்றது.
கடந்த ஜுலை 1ம் தேதி செவ்வாய் கிரகம் சிம்மராசியில் நுஐழந்துள்ளது. இவை மற்றொரு ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு 45 நாட்கள் ஆகுமாம்.
அதன்படி வரும் 18ம் தேதி வரை சிம்ம ராசியில் அமர்ந்திக்கும் செவ்வாய் கிராகம் பின்பு கன்னி ராசிக்குள் நுழைய இருக்கின்றதாம். இத்தருணத்தில் சில ராசியினர், நீச பங்க ராஜயோகத்தின் சாதகமான பலன்களை அனுபவிப்பார்கள்.
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் அசுபமாகவும் பலனளிக்கவும் போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
செவ்வாய் கிரகம் சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால் மேஷ ராசியினருக்கு நல்ல காலம் ஆகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பலன்களை தருவதுடன், வருமானமும் அதிகரிக்கும். திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். இத்தருணத்தில் உங்களால் சேமிக்கவும், தைரியமும், துணிவும் அதிகரிப்பதுடன் எதிரிகளை வெல்லவும் முடியுமாம்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு சமூகத்தில் மரியாதையும் அங்கீகாரமும் அதிகரிப்பதுடன், நிதி வளர்ச்சி மற்றும் லாபமும் கிடைக்கின்றது. சொத்து தொடர்பான சர்ச்சைகளை இத்தருணத்தில் அமைதியாக தீர்க்க முடியுமாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் கொடுக்கின்றது. செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி வருவதுடன், தைரியமும், வலிமையும் அதிகரிக்குமாம். பணியாளர்களுக்கு வேலையில் பணி உயர்வு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியினர் இந்த நேரத்தில் நல்ல பலனை அடைவதுடன், தொழில் மற்றும் வியாபாரம் இவற்றிலும் சாதகமான பலனைத் தருவார். பொருளாதார ரீதியாகவும் நல்ல பலனை அடைவதுடன், பரம்பரை சொத்துக்களும் இந்த நேரத்தில் பலன் அளிக்குமாம்.
மீனம்
மீன ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி சுப பலனை தருவதுடன், பதவி உயர்வும் கிடைக்கின்றது. வரும் 18ம் தேதி வரை அதிர்ஷ்டம் உங்களுடன் சேர்ந்து இருப்பதுடன், புகழும் அதிகரிக்கும். பாதியில் நிறுத்தப்பட்ட வேலைகள் விரைவில் முடிவடையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |