கன்னி ராசிக்குள் நுழையும் செவ்வாய்... இரட்டிப்பு நன்மையை பெறும் ராசியினர் யார்?
Mars Transit Virgo: கன்னி ராசியில் நுழையும் செவ்வாய் கிரகத்தினால் எந்தெந்த ராசியினர் நன்மை பெறுகின்றனர் என்பதை தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதி என்று அழைக்கப்படுவது செவ்வாய் ஆகும். தைரியம், செயல், லட்சியம், போட்டி இவற்றிற்கு காரணராயிருக்கிறார்.
செவ்வாய் பெயர்ச்சி முக்கியமாக பார்க்கப்படும் நிலையில், நவம் 25ம் தேதி கன்னி ராசிக்குள் நுழைகின்றார். கன்னி ராசி கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதனால் ஆளப்படும் ராசியாகும்.
இதில் செவ்வாய் நுழைவது மிக முக்கியமான நிகழ்வாகும். இந்நிலையில் இந்த பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினர் முன்னேற்றம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு செவ்வாயின் இந்த ராசி மாற்றம் வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்களை கொடுக்கின்றது. எந்தவொரு காரியத்தினை மேற்கொண்டாலும் அவை வெற்றியாக மாறுமாம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு சிறந்த பலனை கொடுக்கும்.
இந்த காலக்கட்டத்தில் உங்களது நிதி நிலையும் உயர்வதுடன், அலுவலகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். எதிர்காலத்திற்கான பயனுள்ள திட்டங்கள் சிலவற்றை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த காலக்கட்ட மிகவும் முக்கியமாகும். நவம்பர் 26 முதல் டிசம்பர் 31 வரை தனது சொந்த ராசியில் செவ்வாய் நிலைத்திருப்பதால், தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
தொழில்முறை உற்பத்தியும் பலமடங்கு உயருமாம். புதிய திட்டம் தொடங்க இவை நல்ல சந்தர்ப்பம் ஆகும். சிக்கல்களையும் இந்த காலக்கட்டத்தில் தீர்க்க முடியுமாம்.
கன்னி ராசியினை ஆளும் புதன் கிரகம் டிசம்பர் 26ம் தேதி மகர ராசிக்குள் நுழைவது, இந்த ஆண்டின் இறுதி சிறந்த நாட்களாக மாறப்போகும்.
ஆனால் உங்களது ராசியில் செவ்வாய் இருப்பது உடல் ஆற்றலையும், ஊக்கத்தையும் அதிகரிக்குமாம்.

தனுசு
தனுசு ராசியினருக்கு செவ்வாயின் இந்த பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறையான மாற்றம் இருக்கும். சூரியன் உங்களது ராசியில் டிசம்பர் 21 வரை இருப்பதால் இவை கூடுதலாக நன்மையை அளிக்கின்றது.
இந்த காலம் சுறுசுறுப்பான தொழில்முறை காலமாக இருக்கும். செவ்வாய் முடிவுகளை நோக்கி தள்ளினாலும், சூரியன் பெரிய லட்சியங்களை ஊக்குவிக்குமாம்.
மேலும் டிசம்பர் 7 அன்று புதன் தனுசு ராசியில் நுழைவதால், இவர்களின் திறன்கள் இன்னும் அதிகரிக்குமாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
புதிய முதலீடு செய்வதற்கு இவை சிறந்த நேரமாகும்.ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன், அனைத்து முயற்சிகளும் வெற்றியையே கொடுக்கும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |