செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 12 முதல் அதிர்ஷ்ட பலன்களை பெறப்போகும் டாப் 3 ராசிகள்!
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றங்களைப் போலவே நட்சத்திர மாற்றங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்கின்றன.
கிரகங்களின் நிலையில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலுக்குக் காரணியாக விளங்குகிறார்.
தற்போது மிதுன ராசியில் பயணித்து வரும் செவ்வாய், ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று திருவாதிரை நட்சத்திரத்திற்கு செல்கிறார்.செவ்வாய் திருவாதிரை நட்சத்திரத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி வரை சஞ்சரிக்கிறார்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதால், செவ்வாயின் இந்த மாற்றம் அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு தொழில், நிதி நிலை, தனிப்பட்ட வாழ்க்கை என பல வழிகளிலும் அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது.
கன்னி

செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஆசைகள் நிறைவேறும். மன தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
முதலீடுகளில் லாபம் கிடைக்கவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீண்ட நாள் உழைப்புக்கு பலன் கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்; வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை வீடு தேடி வரும்.நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்

செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், நிதி முன்னேற்றத்தையும் தரும். நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த பணிகள் நிறைவேறும்.
தன்னம்பிக்கை அதிகரித்து, குடும்பத்துடன் இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி நிலவும். கணவன் மனைவிக்கு இடையில் நீண்ட காலம் நிலவிவந்த கருத்து வேறுப்பாடுகள் நீங்கும்.
மீனம்

செவ்வாய் நட்சத்திரப் பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலைப்பளு மற்றும் மன அழுத்தம் குறையும். எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும்.
நிதி நிலை உயரும்; சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
முயற்சிக்கும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். குறிப்பாக தொழில் முயற்சிகள் அதிக முன்னேற்றத்தையும் லாபத்தையும் பெற்றுக்கொடுக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |