கடகத்தில் உதயமாகும் குரு: இந்த ராசிக்காரர்கள் நிதி விடயத்தில் ஜாக்கிரதை!
வேத ஜோதிடத்தின்படி, தேவர்களின் குருவாகக் கருதப்படும் குரு பகவான் தற்போது தனது உச்ச ராசியான கடகத்தில் பயணித்து வருகிறார். இதுவரை அஸ்தமன நிலையில் இருந்த குரு பகவான், ஆகஸ்ட் 12ஆம் தேதி உதயமாகிறார்.
குரு உதயமாவது பொதுவாக மங்களகரமானதாகக் கருதப்பட்டாலும், அதன் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கலாம்; சிலர் பொறுமையுடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டியிருக்கும்.

தற்போது கடக ராசியில் குரு உதயமாவதால் எந்த ராசிக்காரர்கள் சவால்களையும், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்யைில் அதிகளவில் பாதக பலன்களை அனுபவிக்கப்போகின்றார்கள் என இந்த பதிவி்ல பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களின் 4-ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதன் காரணமாக குடும்பம், வீடு, சொத்து மற்றும் மன அமைதி தொடர்பான விஷயங்களில் சற்று கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
குறிப்பாக குடும்பத்தில் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்படாமல், நிதானமாக ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும்.
இந்த காலகட்டத்தில் குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வீட்டில் ஏற்படும் சில கூடுதல் செலவுகள் அல்லது எதிர்பாராத பொறுப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். எனவே, எதையும் பதற்றத்துடன் அணுகாமல் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
மிதுனம்

மிதுன ராசியின் 2-ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் பணவரவு மற்றும் குடும்ப நிதிநிலை தொடர்பாக சில சாதகமான வாய்ப்புகள் உருவாகலாம்.
அதே நேரத்தில், வருமானம் அதிகரிப்பதைப் போலவே தேவையில்லாத செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால் பணத்தை திட்டமிட்டு நிர்வகிப்பது மிகவும் அவசியம்.
குறிப்பாக, அவசரப்பட்டு பெரிய அளவில் முதலீடுகளை செய்வதையோ, முழுமையாக ஆராயாமல் பணத்தை செலவு செய்வதையோ தவிர்க்க வேண்டும்.எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு சேமிப்பில் கவனம் செலுத்துவது நல்லது.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் 12-ஆவது வீட்டில் குரு பகவான் உதயமாகிறார். இதனால் இனிவரும் காலத்தில் நிதி விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தேவையில்லாத செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வருமானத்திற்கு ஏற்ற வகையில் செலவுகளை திட்டமிடுவது அவசியம். குறிப்பாக ஆடம்பரச் செலவுகள் மற்றும் அவசியமில்லாத வாங்குதல்களை குறைத்துக் கொள்வது நல்லது.
அதேபோல், தேவையற்ற கடன்களை வாங்குவதையோ, அதிக ஆபத்து கொண்ட முதலீடுகளில் அவசரமாக பணத்தை செலுத்துவதையோ தவிர்க்க வேண்டும்.
பண விஷயங்களில் மற்றவர்களின் வார்த்தைகளை மட்டும் நம்பி முடிவெடுக்காமல், நன்கு ஆராய்ந்து செயல்படுவது இழப்புகளை தவிர்க்க உதவும். உடலில் ஏற்படும் சிறிய அறிகுறிகளையும் அலட்சியப்படுத்தாமல் கவனித்துக் கொள்வது அவசியம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |