ரிஷபத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 21 முதல் இந்த 3 ராசிகளுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி தான்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்கள் சீரான இடைவெளியில் தங்களின் ராசிகளை மாற்றுகின்றன. அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவைகையில், ஜூன் 21 அன்று செவ்வாய் கிரகம் மேஷ ராசியிலிருந்து விலகி சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக்குள் நுழைய உள்ளது.

ஆற்றல், செயல்பாடு, லட்சியம் மற்றும் மன உறுதியை குறிக்கும் செவ்வாய் கிரகத்தின் இந்த மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தலாம்.
சிலருக்கு தொழில் மற்றும் நிதி முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்படி செவ்வாய் பெயர்ச்சியால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகம் இரண்டாம் வீட்டில் பெயர்ச்சி ஆகிறது. இது பொருளாதார வளர்ச்சி, புதிய வருமான வாய்ப்புகள் மற்றும் புதிய வியாபார முயற்சிகளில் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். அலுவலகத்தில் செயல்திறன் அதிகரித்து அங்கீகாரம் கிடைக்கும்.
குடும்ப ஆதரவும், தம்பதிகளிடையே நெருக்கமும் அதிகரிக்கும். நீண்ட கால கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் பணவரவால் மகிழ்சி உண்டாகும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி நிலையில் பாரிய வளர்ச்சியை ஏற்படுத்தும் காலகட்டமாக அமையப்போகின்றது.
வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கலாம். நிலுவை பணிகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
இந்த காலம் பொதுவாக நல்ல முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்திக்கொடுக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையில் ஒற்றுமை அதிகரிக்கும்.
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி நிதிநிலையில் பாரிய ஏற்றத்தை கொடுக்கப்போகின்றது. நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்கு சாதகமான காலமாக இருக்கும்.
புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நிலைத்தன்மை அதிகரிக்கலாம்.
நீண்ட காரமாக தடைப்பட்டு வந்த வேலைகள் எளிதில் நிறைவடையும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |