மிருகசீரிடம் நுழையும் செவ்வாய் - இந்த 3 ராசிகள் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறப்பது உறுதி!
ஜோதிடத்தின் பிரகாரம் நவகிரகங்கள் ராசி மட்டுமல்ல, நட்சத்திரங்களையும் மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துகின்றன.அதில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படுபவர் செவ்வாய்.
தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான இவரே மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியும் ஆவார். செவ்வாய் சுமார் 45 நாட்களுக்கு ஒரு ராசியில் பயணித்து, அவ்வப்போது நட்சத்திர மாற்றமும் செய்கிறார்.

தற்போது ரிஷப ராசியில் பயணிக்கும் செவ்வாய், ஜூலை 24 அன்று மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியும் செவ்வாயே என்பதால், இது சிறப்பான கிரக நிலையாகக் கருதப்படுகிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும் குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரிவழங்கப்போகின்றது. அப்படி செவ்வாயால் ராஜ வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மேஷம்

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் ஆற்றலும் தைரியமும் அதிகரிக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
பணியிடத்தில் தன்னம்பிக்கை உயரும். பெற்றோரின் முழு ஆதரவும் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகும். இதனால் நிதி நிலை மேம்படும்.
கடகம்

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வேலைக்குச் செல்லுபவர்கள் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் பெற வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு இருக்கிறது. நிதி நிலை மேம்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சிம்மம்

செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
வேலைக்குச் செல்லுபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். நீண்ட நாள் கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |