செவ்வாய் ராசி மாற்றம்: ஆகஸ்ட் 2 முதல் இந்த ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி உறுதி!
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் தைரியம், வீரம், வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக விளங்குகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் இருப்பார்.
தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் செவ்வாய், ஆகஸ்ட் 2 ஆம் தேதி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். புதன் ஆட்சி செய்யும் மிதுன ராசியில் செவ்வாய் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை இருப்பார்.

இந்த பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும், குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில், தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், புதன் ஆசியால் தொழில் மற்றும் நிதி ரீதியில் உச்சகட்ட சாதக பலன்களை அனுபவிக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

செவ்வாய் மேஷ ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ச்சி அடைவதால் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றம், வேலை தொடர்பான பயணங்கள் மற்றும் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும்.அதிர்ஷ்டமும் முழுமையாக கைகொடுக்கும்.
மிதுனம்

செவ்வாய் முதல் வீட்டிற்கு வருவதால் ஆற்றல், தன்னம்பிக்கை, உற்சாகம் உயரும்.தலைமைத்துவ திறன் மேம்பட்டு, பணியில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபமும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும்.இந்த காலகட்டத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும்.
சிம்மம்

செவ்வாய் 11ஆம் வீட்டில் இருப்பதால் வருமானம் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உருவாகலாம்.
செல்வாக்கு மிக்கவர்களின் ஆதரவும், பணியில் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும்.குறிப்பாக இதுவரையில் இல்லாத அளவுக்கு நிதி நிலையில் அசுர வளர்ச்சி உண்டாகும்.
கன்னி

செவ்வாய் 10ஆம் வீட்டிற்கு வருவதால் தொழில் வளர்ச்சி, வருமான உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலை மேம்பட்டு, கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதன் ஆசியால் சிந்தனையில் தெளிவு பிறக்கும். மன அமைதி கிடைக்கும்.
தனுசு

செவ்வாய் 7ஆம் வீட்டில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் எதிர்பாராத லாபமும் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு வலுப்படும்.
தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |