கடகத்தில் செவ்வாய் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம் : அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக விளங்குகிறார்.
இவர் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்கி, மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதியாகவும் உள்ளார். தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில், செப்டம்பர் 18ஆம் தேதி செவ்வாய் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கடகம் செவ்வாயின் நீச்ச ராசி என்பதால், இங்கு செவ்வாய் பலவீனமான நிலையில் இருப்பார்.
ஆனால், செவ்வாய் கடகத்தில் நுழையும் நேரத்தில் அங்கு குரு பகவான் இருப்பதால், செவ்வாயின் நீச்சம் நீங்கி நீச்சபங்க ராஜயோகம் உருவாகும்.
இந்த நீச்சபங்க ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும் என ஜோதிட நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சில ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் அதிர்ஷ்டகரமாக அமையப் போகிறது. கடக ராசிக்குள் செல்லும் செவ்வாயால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
துலாம்

செவ்வாய் பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
இதுவரை வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
குடும்ப உறவு சிறப்பாக இருக்கும்.பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
கும்பம்

கும்ப ராசியின் 6-வது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால் தொழில் மற்றும் வேலை தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முக்கிய பணிகளை சரியான நேரத்தில் முடித்து நல்ல பெயர் பெறுவீர்கள்.
நிதி நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் அமையும். இருப்பினும், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம்

ரிஷப ராசியின் 3-வது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால் வாழ்வில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரித்து, வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடியும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
பயணங்கள் மூலமாகவும் நல்ல ஆதாயம் கிடைக்கும். பொருளாதாக ரீதியில் இதுவரை இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்பம்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |