பொதுவாக கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தால் ஒருவரின் ராசிபலன் கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில், எதிர்வரும் 2025 ஜனவரி 01 ஆம் திகதி சந்திரன் மகர ராசிக்குள் நுழையவுள்ளார்.
சந்திரன் மகர ராசியில் நுழைந்த பின்னர் அந்த கிரகத்தின் அதிபதியான செவ்வாய்
7 ஆவது வீட்டில் மீண்டும் அதே ராசியில் பயணம் செய்வார். இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் தனயோகம் உருவாகும்.
இந்த சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் புத்தாண்டு குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அப்படியாயின், கஷ்டங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கைக்குள் செல்லும் ராசிகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
செவ்வாய்-சந்திரன் சேர்க்கை
மேஷ ராசி
| - பல வகைகளிலும் அனுகூலமான நாள்.
-
எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
- உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
- ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
-
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
|
ரிஷபம் ராசி
| - தந்தை வழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
- புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
-
முருகப்பெருமானை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
|
மிதுனம் ராசி
| - உடல்நலனில் கவனம் தேவை.
-
வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
-
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
-
மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
- பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாளாக பார்க்கப்படுகின்றது.
|
கடகம் ராசி
| - வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.
-
வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
- விநாயகரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி அனுகூலமாக முடியும்.
|
சிம்மம் ராசி
| - நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
-
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
-
தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
- தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.
|
கன்னி ராசி
| - செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள்.
- நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
-
வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
- இன்று விநாயகர் வழிபாடு நலம் சேர்க்கும்.
-
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.
|
துலாம் ராசி
| - சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
-
கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
-
வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும்.
-
வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும். இன்றைய தினம் ஆஞ்சநேயரை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
|
விருச்சிகம் ராசி
| - புதிய முயற்சிகளுக்கு மிகவும் அனுகூலமான நாள்.
-
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
-
ஆறுமுகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
- வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
- கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படும்
|
தனுசு ராசி
| - அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
-
வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
-
உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
-
வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
- மகாலட்சுமி வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
|
மகரம் ராசி
| - பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள்.
- வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும்.
- இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
-
ஷண்முகக் கடவுளை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.
|
கும்பம் ராசி
| - மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.
- தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
- வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
- கால பைரவரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும்.
|
மீனம் ராசி
| - எந்த முடிவையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது.
-
சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
- வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
- அம்பிகை வழிபட தடைகள் நீங்கும்
- ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையால் பணவரவு அதிகமாகும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).