வேலைக்கு செல்பவரை திருமணம் செய்துகொள்! மனைவிக்கு வாட்ஸ் அப் குறுந்தகவலை அனுப்பிவிட்டு கணவர் எடுத்த முடிவு!
நபர் ஒருவர் மனைவிக்கு வாட்ஸ் ஆப்பில் வேலைக்கு செல்பவரை திருமணம் செய்துகொள் என குறுந்தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்தியபிரதேச மாநிலம் சிந்த்வாராவைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் சமோட்டா தில்வாரி என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்துள்ளது.
இதனையடுத்து, பிடெக் பட்டதாரியான சதீஷ், சில காலம் வேலையில்லாமல் இருந்துள்ளார். அவரது மனைவி வனத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார். திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 16-ந்தேதி மனைவி சமோட்டா வேலைக்காக ரஹத்கான் சென்ற போது, சதீஷ் தற்கொலை செய்துகொண்டார்.
இதனைத்தொடர்ந்து, தற்கொலை செய்து கொள்ளும் முன்பு மனைவிக்கு 'நான் போகிறேன். நீ நல்லா இரு, வேலை செய்கிற வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்' என்று வாட்ஸப்பில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
மறுநாள் காலையில் குறுந்தகவலைப் பார்த்த அவரது மனைவி போலீசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சென்று பார்த்தபோது, சதீஷ் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
இரண்டு பக்க தற்கொலைக் கடிதத்தையும் அவர் விட்டுச் சென்றுள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.