பேத்தியின் காதலுக்கு பச்சை கொடிக் காட்டிய ஜோ பைடன்! எளிய முறையில் திருமணமாம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தியின் திருமணம் மிக எளியமுறையில் நடந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேத்தியின் திருமணம்
அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஜோ பைடன் பேத்தியான நவோமி பைடன், பிரபல வழக்கறிஞராக வாஷிங்டனில் பணியாற்றி வருகிறார்.
இதனைத்தொடர்ந்து 28 வயதான நவோமி, சட்டக்கல்லூரி மாணவராக கல்வி பயிலும் 24 வயதான பீட்டரை நீண்டகாலமாக காதலித்து வந்துள்ளார்.
Photo: Instagram/@rafanellievents
இதனை அறிந்த ஜோ பைடன் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த திருமண நிகழ்வு மிகவும் எளிய முறையில் நடைபெற்றுள்ளதாகவும் இந்நிகழ்வில் ஜோ பைடன் உட்பட மொத்தமாக 250 உறுப்பினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
(Adam Schultz/The White House via Getty Images/AFP)
வெள்ளை மாளிகையில் திருமணம்
அந்த வகையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற முதல் திருமண நிகழ்வு இதுவாகும்.
மேலும் வெள்ளை மாளிகையில் 1812-ம் ஆண்டிலிருந்து இன்று வரை 19 திருமணங்கள் வைபவங்கள் மாத்திரமே நடைப்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Several images from Naomi Biden’s wedding have been posted to her event planner’s instagram page: pic.twitter.com/jwbKomkNpS
— Kate Bennett (@KateBennett_DC) November 19, 2022
AP