ஆசையாய் மாலைப் போட வந்த மணமகள் - அடுத்து மணமகன் செய்த காரியத்தை பாருங்க
ஆசையாய் மாலைப் போட வந்த மணமகளிடம் மணமகன் செய்த காரியம் சமூகவலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆசையாய் மாலைப் போட வந்த மணமகள்
திருமணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும்.
திடீரென்று சண்டைகளும் நிகழும். மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திருமண மேடையில் ஆசையாய் மணமகள், மணமகனுக்கு மாலைப் போட வந்தார். ஆனால், மணமகன் மணமகளை மாலைப் போட முடியாமல் செய்தார்.
மீண்டும், மீண்டும் மணமகள் மாலைப் போட முயற்சி செய்தபோது, மணமகன் பிடிகொடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் சளித்துக்கொண்ட மணமகளைப் பார்த்த மணமகன் கீழே குனிந்தார்.
அப்போது, மணமகள் சிரித்துக் கொண்டே மாலை அவர் கழுத்தில் அணிவித்தார். உடனே, மணமகன் தரையில் மண்டியிட்டு மணமகளின் இரு கைகளைப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.