வரதட்சணையால் நின்றுப்போன திருமணம்: கைது செய்யப்பட்ட மாப்பிள்ளை! எதற்காகத் தெரியுமா?
திருமணம் என்றாலே சிலருக்கு ஞாபகம் வருவது வரதட்சணை தான். இந்த வரதட்சணை ஒழிக்க வேண்டும் என்று போராடினாலும் இன்னும் சில இடங்களில் எமக்குத் தெரியாமல் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
வரதட்சணையால் எத்தனையோ பெண்கள் உயிரிழந்த சம்பங்களையும் நாம் கேட்டிருப்போம், பார்த்திருப்போம். அந்தவகையில் திருமணத்தைக் காரணம் காட்டி திருமணத்தை நிறுத்தியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில், அவ்வாறான சம்பவம் ஒன்று தான் இந்தியாவில் தெலுங்கானா பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வரதட்சணையால் நின்ற திருமணம்
ஹைதராபாத்தில் உள்ள பெண்ணுக்கும் அதே ஊரைச் சேர்ந்த பஸ் ஓட்டுனராக தொழில்புரியும் ஆணொருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
குறித்த திருமண நிகழ்விற்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் வரவில்லை. அதனால் திருமணத்திற்கு வருமாறு மணமகளின் தந்தை அழைக்க அவரிடம் தவறான முறையில் நடந்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், தாங்கள் கேட்ட பொருட்களை நீங்கள் தரவில்லை. பர்னீச்சர்களும் பழமையாகவே கேட்ட வரதட்சணை எதிர்பார்த்த அளவில் இல்லாததால் திருமணத்திற்கு வர மறுத்து விட்டார்.
திருமணத்திற்கு உற்றார் உறவினர்கள் எல்லாம் வந்து விட்டார்கள் ஆனால் திருமணம் மணமகன் மட்டும் வரவில்லை. இதனால் கடுப்பான மணமகளின் தந்தை பொலிஸில் புகாரளித்துள்ளார்.
கொடுக்கப்பட்ட புகாருகமைய இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.