காதல் ப்ரொபோஸா பண்றீங்க... முகம்சுழிக்கும் செயலை செய்து காதலர்களை பழிவாங்கிய நாய்! வைரலாகும் காட்சி
காதலியை அழைத்து வந்த காதலர், தனது காதலை தெரிவிக்க சென்ற தருணத்தில், நாய் ஒன்று இடையே வந்த தனது காலை கடனை முடித்துவிட்டு சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக காதலிக்கும் நபர்கள் தங்களது காதலியை யாரும் இல்லாத அமைதியான மற்றும் அழகான இடத்திற்கு அழைத்துச் சென்று தங்களது காதலைக் கூறுவதை நாம் அவதானித்திருப்போம்.
அதே போன்று தான் இங்கும் காதலர் ஒருவர் தனது அழகான காதலியை அழைத்து வந்து லவ் ப்ரொபோஸ் செய்ய முயன்றி இடையே நாய் ஒன்று புகுந்து முகம் சுழிக்க வைத்துள்ளது. இச்சம்பவம் கனடாவில் நடைபெற்றுள்ளது.
ப்ரொபோஸ் செய்வதை காணொளியாக எடுத்து மறக்கமுடியாத சம்பவமாக வைத்திருக்க நபர் எண்ணிய வேளையில், எதிர்பாராத விதமாக நாய் இடையே வந்து தனது காலை கடனை முடித்து சென்றுள்ளது.
இவங்க காதலைக் கூடுவதற்கு நாயின் இடத்தினை ஆக்கிரமித்தால் அது பலி வாங்கத்தானே செய்யும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இதே போன்று சமீபத்தில் எமிலி என்பவர் திருமணத்தின் போது அவரது வளர்ப்பு நாய் ஹென்றி அட்டகாசமாக போஸ் கொடுத்து மணமக்களை பின்னுக்கு தள்ளி இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.