திருமணத்தில் நடனமாடிய மணமகள் - குஷியில் பணத்தை வாரி இரைத்த மணமகன் - வைரல் வீடியோ
திருமணத்தில் நடனமாடிய மணமகள் மீது மணமகன் பணத்தை வாரி இரைத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மணமகள் மீது பணத்தை வாரிய இரைத்த மணமகன்
திருமணம் என்பது இரு மனங்கள் சங்கமிக்கும் ஒரு தருணம். அது சிலருக்கு வரமாகவே கிடைத்து விடும். திருமணங்களில் பல வேடிக்கைகளும் நடக்கும். திடீரென்று சண்டைகளும் நிகழும்.
மணமேடையில் நடக்கும் சில சில விஷயங்கள் கூட சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோலதான், தற்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
திருமணத்தில் மணமகள் சூப்பரா நடனமாடினாள். இதைப் பார்த்ததும் மணமகன் பூரித்துப் போய் பணக்கட்டுகளை எடுத்து மணமகள் மீது வாரி வாரி இரைத்தார். இதைப் பார்த்து திருமணத்திற்கு வந்தவர்கள் ஆச்சரியத்தில் அசந்து போனார்கள்.
தற்போது இது தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் கொடுத்து வைத்த பெண் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.