ஒரே வருடத்தில் விவாகரத்து? யார் யார் அந்த பிரபலங்கள் தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் பிரபலங்களின் சில சர்ச்சையான விடயங்களுக்கு சமூக வலைத்தளங்களில் பஞ்சமே இருக்காது.
இவர்கள் திருமணம் முடிந்து சில காலங்களுக்கு சில வதந்திகள் பரவிக் கொண்டிருக்கும். இதனை தொடர்ந்து சில காலங்களில் இந்த உறவு முறிவை சந்திக்கும்.
பேட்டி கொடுப்பது என்ற பெயரில் இவர்களின் வாழ்க்கை நடந்த அத்தனை விடயங்களையும் மீடியாக்களுக்கு கண்டன்டாக கொடுத்து விடுவார்கள்.
அந்த வகையில் சொந்த வாழ்க்கையே கண்டன்ட்டாக்கிய ஐந்து தொலைக்காட்சி பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
1. திவ்ய தர்ஷினி (டிடி)
தற்போது தொலைக்காட்சிகளில் இருக்கும் இளம் தொகுப்பாளர்களுக்கு ஒரு முக்கிய எடுத்து காட்டு தான் டிடி. இவரின் திறமைக்கும் பேச்சிற்கும் இணையாக இன்றும் தொலைக்காட்சியில் வரவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த “ஸ்ரீகாந்த்” என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக ஓரே வருடத்தில் இருவரும் பிரிந்து விட்டார்கள். தொடர்ந்து இவரின் முன்னாள் கணவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. ரம்யா சுப்ரமண்யம்
பிரபல தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் தான் ரம்யா. இவர் திருமணம் முடிந்து ஒரு வருட கழித்து விவாகரத்தும் செய்து விட்டார். இதனை தொடர்ந்து அது பற்றி கவலைகள் எதுவுமின்றி அவரின் வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.
3.பிரியங்கா
டிடியிற்கு அடுத்தபடியாக விஜய் தொலைக்காட்சியில் கொடிக்கட்டி பறந்தவர் தான் பிரியங்கா. இவர் பிக்பாஸிலும் கால்பதித்து உலகளவில் பிரபலமாகி விட்டார். இதனை தொடரந்து நிகழ்ச்சியில் உதவி இயக்குநராக பணியாற்றிய வரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரியங்கா பிக்பாஸ் சென்ற நேரத்தில் இருவருக்கும் விவாகரத்து நடந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
4. விஜே மகேஸ்வரி
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பிரபலமாகியவர் தான் மகேஸ்வரி. இவரும் திருமணம் செய்து ஒரு ஆண்டுகளில் விவாகரத்து செய்து கொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். மேலும் பல நிகழ்ச்சிகளில் ஒரு குழந்தையை தனியாக வளர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை பற்றி இவர் பேசி இருக்கிறார்.
5. ரேஷ்மா பசுபலேட்டி
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் ரேஷ்மா பசுபலேட்டி. திருமணத்திற்குப் பின் வெளிநாட்டில் செட்டில் ஆகிய இவர் கணவருக்கும் இவருக்கும் சில கருத்து வேறுப்பாடுகள் ஏற்பட்டதால் இந்தியா திரும்பி விட்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இவரின் மகனுடன் தனியாக இருந்து வரும் ரேஷ்மா பாக்கியலட்சுமி சீரியலில் நெகடிவ் கேரக்டரில் நடித்து வருகிறார்.