மாரிமுத்துவே திரும்பி எங்களை பார்க்க வந்தார்... மனைவி கூறிய புல்லரிக்க வைத்த சம்பவம்
எதிர்நீச்சல் சீரியலில் நடித்த மாரிமுத்து மரணமடைந்த நிலையில், அவரது மனைவி கூறிய தகவல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.
மாரிமுத்து மனைவி உருக்கம்
பிரபல யூடியூப் சேனல் நடத்திய மாரிமுத்துவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது மனைவி பல விடயங்களை பகிர்ந்துள்ளார்.
மாரிமுத்து மறைந்த செய்தியைக் கேட்ட வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் ஒரு அட்டையில் மாரிமுத்து என்ற பெயருடன் தனது கிராமத்து ஊரை மட்டும் எழுதி கையில் வைத்துக்கொண்டு எங்களது வீட்டில் நேரில் வந்து எங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அவரைப் பார்த்ததும் ஒட்டுமொத்த குடும்பமும் பெரும் அதிர்ச்சியடைந்த நிலையில், எனது கணவர் இப்படிப்பட்ட மனிதரையும் ரசிகராக சேர்த்து வைத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்து கண்கலங்க செய்ததுடன், எனது கணவரே மீண்டும் எங்களை பார்க்க அந்த ரூபத்தில் பார்க்க வந்ததாக உணர்ந்தோம்.
பின்பு அவருக்கு உணவு வழங்கியதோடு, வழி செலவிற்கு காசும் கொடுத்து ஒருவரை அவருடன் அனுப்பி பேருந்து ஏற்றிவிட்டு வருமாறு கூறி அனுப்பினோம் என்று கூறி புல்லரிக்க வைத்துள்ளார்.
அவருக்கு பாசம் காட்ட தெரியாது... எப்பொழுதும் மனதில் குடும்பம் குடும்பம் என்று தான் நினைத்திருந்தார். அவரது மறைவு எங்களை வாட்டி வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |