தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த மாரிமுத்து
தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த மாரிமுத்துவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவை விட சீரியல்கள் தான் முன்னிலையில் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருந்த சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்த மாரிமுத்து மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
காலை 8.30 மணியளவில் உயிரிழந்த மாரிமுத்துவின் சடலம் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பேனர் முன் நின்று செல்ஃபி
இதனை தொடர்ந்து மாரிமுத்து என்ன நன்மைகள் செய்தார், அவரின் புகைப்படங்கள், சமீபக்காலமாக அவர் கொடுத்த பேட்டி என அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், ‘விழா நாயகன்' படத்தில், தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி பேனர் முன் நின்று செல்ஃபி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
புகைப்படத்தை பார்த்த மாரிமுத்து ரசிகர்கள் அவரின் குடும்த்தாருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |