எதிர்நீச்சல் 'மாரிமுத்து' திடீரென மாரடைப்பால் மரணம்..(Live)
பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (57) இன்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார்.
மாரடைப்பால் உயிரிழப்பு
நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து இன்று காலை சீரியலுக்கு டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
தொலைகாட்சி தொடர்களில் நடித்து வரும் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமானார். அவர் பேசிய 'ஏய் இந்தம்மா' என்ற வசனம் சமீபத்தில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இவர், இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
இதையடுத்து, கண்ணும் கண்ணும், புலிவால் என்ற இரு திரைப்படங்களை இயக்கினார். பின்னர், இயக்குனர் மிஷ்கின் இயக்கிய யுத்தம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார்.
மேலும், அண்மையில் வெளியான ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை மாரிமுத்து உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும், சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் சடங்கு, சம்ரதாயங்கள் நடைபெறும் என தகவல் வந்துள்ளது.
#Shocking ..
— Johnson PRO (@johnsoncinepro) September 8, 2023
Director Actor #marimuthu passed away now at 8.30am. Due to Cardiac Arrest. #ripmarimuthu pic.twitter.com/SUu1AF60mZ