March Rasi Palan: மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டத்தில் மூழ்கும் 5 ராசிகள்
புதிதாக பிறந்திருக்கும் மார்ச் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிரக நிலைகளின் மாற்றத்தினால், புதிதாக பிறக்கும் மாதத்தில் சில ராசியினர் தங்களது பிரச்சினையிலிருந்து மீண்டு வருவார்கள். ஆனால் சில ராசியினர் அதிகமாக போராட வேண்டியதும் இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாதத்தில் தொழில் வாழ்க்கை அனைத்து ராசியினருக்கும் எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியினர் தொழில் தொடர்பான பிரச்சினையை சந்திப்பதுடன், இந்த மாதத்திற்கு லாபத்திற்கு பதிலாக நஷ்டமும் ஏற்படலாம். அரசு வேலைக்காக தேர்வில் கலந்து கொள்பவர்கள் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் சாதகமான சூழ்நிலையாக இருக்கும். கடின உழைப்பினால் வெற்றி பெறும் இவர்கள், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் தயவும் கிடைக்கும். வியாபாராம் செய்பவர்களுக்கும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியினரைப் பொறுத்தவரையில், புதிதாக தொழில் தொடங்க நினைப்பதை சற்று தள்ளி போடவும். இந்த மாதத்தில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். பணியிடத்தில் உயரதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படுவதுடன், இதனால் பல பிரச்சினையையும் சந்திக்க நேரிடும்.
கடகம்
கடக ராசியினருக்கு புதிய தொழிலில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைப்பதுடன், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் தயவும் கிடைக்கும். வேலையில் உங்களது அர்ப்பணிப்பு நல்ல முன்னேற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கும் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வருவதுடன், பணியிடத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு இந்த மார்ச் மாதத்தில் தொழில் சுமாராக இருக்கும். ஆதலால் கனடி உழைப்பிற்கு ஏற்ப வெற்றி கிடைப்பதும் சந்தேகம் தான். வேலை தேடிச் செல்பவர்களும் பல தடைகளையே சந்திக்க நேரிடும்.
துலாம்
துலாம் ராசியினர் தங்களது தொழிலை நினைத்து கவலைபடுவதுடன், திறமைக்கு ஏற்ற வேலையும், பலனும் கிடைக்காமல் சிரமப்படுவீர்கள். இதனால் மனசோர்வு ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் தொழில் ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்து இருக்கின்றது. பணியிடங்களில் உயர் அதிகாரிகள் எதிராக செயல்படுவார்கள். இம்மாதத்தில் வேலையில் வெற்றி காண நிறைய போராட வேண்டியிருக்கும்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இந்த மாதம் நிதி நிலை காரணமாக தொழிலில் பிரச்சினை சந்திக்கும் நிலை ஏற்படும். தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்திருக்கும். இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்
மகர ராசியினர் உங்களது தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வேலை தொடர்பான முடிவுகள் தவறாக செல்லும் வாய்ப்பு அதிகம். தெளிவாக யோசித்து விடயங்களை செய்யவும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு தொழில் வாழ்க்கை சிறப்பாக அமைவதுடன், கடின உழைப்பு அதிக பலன் கொடுக்கும். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நீங்கள் வீட்டில் பெரியவர்களிடம் ஆதவை பெறுவதுடன் மரியாதையும் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியினரைப் பொறுத்தவரை எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றி கிடைப்பதுடன், அனைவரது ஆதரவும் கிடைப்பதுடன், எடுக்கும் வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |