இந்த வைரஸ் தாக்கினால் கண்ணிலிருந்து ரத்தம் வருமாம்.. ஜாக்கிரதை
பொதுவாக உலகம் அவ்வப்போது கொரோனா போன்ற ஆபத்தான வைரஸ்களின் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்படுகின்றது.
சமீபக்காலமாக மார்பர்க் (Marburg) என்ற ஒரு கொடிய வைரஸ் ஆப்பிரிக்காவில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த வைரஸ் கண்களில் இரத்தக் கசிவை ஏற்படுத்தி கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை உண்டாக்கி விடும் என கூறப்படுகின்றது. சில சமயங்களில் மரணத்தை கூட ஏற்படுத்தலாமாம்.
இவ்வளவு கொடுமையான மார்பர்க் வைரஸ் பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
மார்பர்க் வைரஸின் தோற்றம்
கடந்த 1967 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் முதல் முறையாக “மார்பர்க்” வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள மார்பர்க், பிராங்பேர்ட் மற்றும் செர்பியாவின் பெல்கிரேட் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் ஆய்வக பணியாளர்கள் மத்தியில் இந்த வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த வைரஸ் எபோலா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்தது என்றும் கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்த தொற்றால் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
88% வரை மரண விகிதத்தை ஏற்படுத்தும் மார்பர்க் வைரஸ் வௌவால்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவி வருகின்றது. மனிதர்களிடையே நேரடித் தொடர்பு மூலமாகவும் பரவக் கூடியது. அத்துடன்பாதிக்கப்பட்டவர்கள் ரத்தம் உடல் திரவங்களுடன் இணைந்து நோயாக பரவுகின்றது.
ஆரம்ப அறிகுறிகள்
- திடீரென அதிக காய்ச்சல் உண்டாகுதல்
- தாங்க முடியாத தலைவலி ஏற்படும்.
- உடல் முழுவதும் வலி மற்றும் சோர்வு ஏற்படும்.
- குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
- நீரிழப்பு அதிகமாகி மோசமான நிலை ஏற்படும்.
- தொற்று ஏற்பட்ட சில நாட்களுக்குப் பிறகு தோலில் அரிப்பு ஏற்படலாம்.
- தொற்று தீவிரமானால், மூக்கு, ஈறுகள், கண்கள் மற்றும் பிற துளைகளில் இரத்தக்கசிவு ஏற்படும்.
- கண்களில் இரத்தக் கசிவு ஏற்படும்.
- சிலருக்கு கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தும்.
தடுப்பு நடவடிக்கைகள்
- மார்பர்க் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டால் சிகிச்சை எதுவும் கிடையாது.
- ஆரம்ப கட்டமாக இருந்தால் மருத்துவ உதவியை நாடுவது சிறந்தது.
- வௌவால்கள் மற்றும் காட்டு விலங்குகளுடன் நேரடித் தொடர்பைத் தவிர்க்க வேண்டும். அதிலும் குறிப்பாக குகைகள் மற்றும் சுரங்கங்களில் வசிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
- கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.
- சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்பவர்கள் கையுறைகள், முகக்கவசங்கள் போன்ற பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
- வைரஸ் பரவும் அபாயம் உள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |