மனுஸ்மிருதியை எரித்து ஆசிரியை செய்த செயல்! சர்ச்சையை கிளப்பிய காட்சி
இந்துக்களின் புனித நுலான மனுஸ்மிருதியை எரித்து பெண் ஆசிரியை ஒருவர் சிகரெட் பற்ற வைத்து, சிக்கன் சமைத்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புனித நூல் மனுஸ்மிருதி
மனு தர்ம சாத்திரம் (சமசுகிருதம்:मनुस्मृति, மனுஸ்மிருதி) இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள், அற ஒழுக்க விதிமுறைகளை ஒழுங்குபடுத்திக் கூறும் நூல் ஆகும்.
இங்கு காணொளி ஒன்றில் பெண் ஒருவர் குறித்த புத்தகத்தின் பிரதியை தீவைத்து எரித்ததுடன், அதனை வைத்து சிகரெட் பற்ற வைத்து, சிக்கன் சமைத்து வெளியிட்டுள்ளார்.
விசாரணையில் குறித்த பெண்ணின் பெயர் பிரியா தாஸ் என்றும் இவர் பிஹாரைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவர் என்றும் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
இவர் தனது தரப்பு விளக்கமளிக்கையில், புத்தகம் என்பது மனிதர்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவே... ஆனால் மனுஸ்மிருதி அவ்வாறு இல்லை... மனிதர்களிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துவதால் இந்த நூலை எரித்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்
மேலும் அம்பேத்கர் காலம் முதல் இந்த போராட்டம் இருந்து வருகின்றது. மற்றவர்களின் மனதை புண்படுத்தவோ, அரசியல் தலைவர்களுக்கு எதிராகவே தான் இதனை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
அம்பேத்கர் வழியில் பிரியா தாஸின் இந்த செயலை சிலர் பாராட்டி வந்தாலும், இந்துக்களின் புனிதநூலை இவ்வாறு எரிப்பதா என்று பலரும் கொந்தளித்து வருகின்றனர்.
घृणा की सारी हदें पार !!
— Panchjanya (@epanchjanya) March 5, 2023
बिहार की प्रिया दास ने मनुस्मृति जलाकर पहले मुर्गा पकाया।
फिर जलती हुई मनुस्मृति से अपनी सिगरेट भी सुलगाई। pic.twitter.com/bTUQ6mXesX