Siragadikka Aasai: நிறுத்துங்க அம்மா ரோகினியை அடிக்காதீங்க... பழியை தன் மீது சுமத்திய மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி செய்த தவறு தனக்கும் தெரியும் என்று மனோஜ் கூறியுள்ள நிலையில், விஜயா சரமாரியாக மனோஜையும் தாக்கியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியா மாமா குறித்த உண்மை அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மையால் கொதித்தெழுந்த விஜயா ரோகினியை அடித்து வெளியே துரத்தியுள்ளார். தற்போது இந்த பஞ்சாயத்தை தீர்த்து வைப்பதற்கு அண்ணாமலை ஊரிலிருந்த தனது அம்மாவை வரவழைத்துள்ளார்.
பாட்டி ரோகினியை அழைத்து பேசுவதற்கு மனோஜிடம் போன் செய்து கூப்பிட கூறியுள்ளார். அப்பொழுது ரோகினி தன்னை யாரும் அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ளார்.

Tamizha Tamizha: சனிப்பெயர்ச்சி 2025... அதிர்ஷ்டத்தை தட்டித் தூக்கும் 3 ராசிகள்! குழப்பத்தில் தொகுப்பாளர்
வீட்டிற்கு வந்த ரோகினியை விஜயா சரமாரியாக தாக்கிய நிலையில், மனோஜ் நிறுத்துங்க அம்மா... அடிக்காதீங்க... ரோகினி செய்த தவறு ஏற்கனவே எனக்கு தெரியும் என்று பழியை தன்மீதும் சுமத்திக் கொள்கின்றார்.
இதனால் விஜயா மனோஜையும் சரமாரியாக தாக்கியுள்ளார். பொய் சத்தியம் செய்து வீட்டிற்குள் வந்து மீனா, முத்துவை ரோகினி பழிவாங்குவாரா என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |