சில படங்களே நடித்தாலும் பல கோடிகளை சொந்தமாக்கியவர்: யார் இந்த மனோஜ் பாரதிராஜா?
நடிகரும், இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா 48 வயதில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மனோஜ் பாரதிராஜா
இயக்குநா் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் செவ்வாய்க்கிழமைகாலமானாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சேத்துப்பட்டிலுள்ள இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தாா்.
பாரதிராஜா இயக்கிய ‘தாஜ் மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவா் மனோஜ் பாரதிராஜா. அந்தப் படத்துக்குப் பிறகு ‘சமுத்திரம்’ திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானாா்.
தொடா்ந்து, சில திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தாா். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘ஸ்நேக் அன்ட் லாடா்ஸ்’ வெப் சீரிஸில் நடித்திருந்தாா்.
நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநா் மணிரத்னத்திடம் ‘பாம்பே’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளாா். உதவி இயக்குநராக அனுபவம் கொண்ட இவா் ‘மாா்கழி திங்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநரானாா்.
திரைக்கு வந்த சில காலங்களிலேயே நந்தனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2006-இல் திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், இளையராஜா, நாசா் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் தயாரிப்பாளா்கள், இயக்குனர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
வெறும் 48 வயதில் அவர் எதிர்பாராத விதமாகக் காலமாகியிருப்பது வேதனைக்குரிய விடயமாகும்.
இவர் பாரதி ராஜாவின் ஒரே ஒரு மகனாவார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |