இயக்குநர் மனோபாலா கடைசியாக கொண்டாடிய பிறந்தநாள் - வைரலாகும் வீடியோ
இயக்குநர் மனோபாலா கடைசியாக கொண்டாடிய பிறந்தநாள் வீடியோ இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விண்ணை விட்டு மறைந்த இயக்குநர் மனோபாலா
தமிழ் சினிமாத்துறையில் பிரபல இயக்குநராகவும், நகைச்சுவை நடிகராகவும் வலம் வந்தவர் இயக்குநர் மனோபாலா. இவர் தமிழ் சினிமாவில் 175 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் மனோபாலா நடித்து பிரபல நகைச்சுவை நடிகரானார். கடந்த 10 நாட்களாக கல்லீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் மனோபாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால், நேற்று சிகிச்சை பலனில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருடைய இறப்பு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும், ரசிகர்களையும் கண்கலங்க வைத்து விட்டது.
இயக்குநர் மனோபாலா மறைவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். நடிகர்கள், ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகுமார் உட்பட பலர் மறைந்த இயக்குநர் மனோபாலாவிற்கு இரங்கல் தெரிவித்தும், நேரில் சென்று அஞ்சலியும் செலுத்தினர்.
இன்று காலை 11 மணியளவில் இயக்குநர் மனோபாலாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். மதியம் 12.30 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் மனோபாலாவிற்கு இறுதிச் சடங்கு நடைபெற்று 1 மணிக்கு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
கடைசியாக கொண்டாடிய பிறந்தநாள்
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இயக்குநர் மனோபாலா தன்னுடைய கடைசி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்த வீடியோவை நடிகர் சாம்ஸ் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு, உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், மனோ பாலா சாரின் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளது. யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோ பாலா சாருடன் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து, கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இருக்கும். அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மனோ பாலா சாரின் மறைவு
— @ACTOR CHAAMS (@ACTOR_CHAAMS) May 3, 2023
மிகவும் வருத்தமாக உள்ளது
நண்பர் @Kvkathirvelu இயக்கத்தில் யோகி பாபு நாயகனாக நடிக்கும் படத்தில் மனோ பாலா சாருடன் இணைந்து நடித்தேன். அவர் கடைசியாக நடித்து கடைசியாக பிறந்த நாள் கொண்டாடிய படமாக இருக்கும்.
அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
🙏😭💔 pic.twitter.com/Ap9BCFDuBV