கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்தமைக்கு வருத்தப்படும் மஞ்சிமா மோகன்! என்ன காரணம்?
நடிகை மஞ்சிமா மோகன் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்தமைக்கு வருத்தப்படுவதாச சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை மஞ்சிமா மோகன்
சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்து பாப்புலர் ஆனவர் மஞ்சிமா மோகன். அவர் அதற்கு பிறகு பல படங்களில் நடித்து இருந்தாலும் ஒருகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது.
நடிகர் கௌதம் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை மஞ்சிமா மோகனும் தேவராட்டம் என்ற படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருந்கனர்.
அதன் போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் காதலித்து கடந்த 2022-ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்ததற்காக தான் வருத்தப்படுவதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணத்தையும் அவரே கூறியுள்ளார்.
திருமணத்திற்கு முன்னரே மஞ்சிமா மோகன் உடல் எடை அதிகரித்து காணப்படடார் என்பது அனைவரும் அறிந்ததே.ஆனால் திருமணத்திற்கு பின்னர் அவரது உடல் எடை மேலும் அதிகரித்து விட்டதாகவும். இதனை பார்த்து சிலர் தான் கர்ப்பமாக இருக்கிறேனா என கேட்டு வருகின்றமையால் அதனால் வருத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் சில நேரங்களில் அதிக மன உழைச்சலுக்கு ஆளாகி தான் அழுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனால் தன் கணவர் கௌத்தம்மும் பாதிக்கப்படும் போது நான் ஏன் அவரை திருமணம் செய்து கொண்டேன் என வருத்தப்படுவேன்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் கௌதம் கார்த்திக் இது குறித்து தன்னிடம் எதுவும் காட்டிக்கொள்ளாமல் மிகவும் பக்கபலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |