கைவிட்ட உறவினர்கள்: சாதித்து காட்டிய மணிமேகலை வெளியிட்ட புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்
தொகுப்பாளினி மணிமேகலை தனது நீண்ட நாள் கனவாக இருந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கியதுடன், குறித்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக இருக்கும் மணிமேகலை ஹீசேன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்த இவர்கள் பல கஷ்டங்களை சமாளித்து வருகின்றனர்.
குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை புகழ்பெற்றதற்கு அவரும் மணிமேகலை ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மணிமேகலை தற்போது புதிய கார் வாங்குவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி நேரத்தில் தான் நீண்ட நாளாக வாங்க வேண்டும் என்று கனவு கண்டிருந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கி இருப்பதாகவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கார் மற்றும் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிமேகலை புதிய கார் வாங்கி உள்ளதையடுத்து, பிரபலங்களான கவின், ஃபரீனா வாழ்த்து தெரிவித்ததுடன், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.