மணிமேகலை போட்டியாளராக களமிறங்கிய புதிய தொகுப்பாளர்.. அனல் பறக்க வரவேற்பு
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மணிமேகலைக்கு போட்டியாக ஒரு புதிய தொகுப்பாளர் களமிறங்கியுள்ளார்.
சிங்கிள் பசங்க
பிரபல தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சிங்கிள் பசங்க.
இந்த நிகழ்ச்சியில், தனிமையில் இருப்பவர்கள் ஜோடிக் கொடுத்து படங்களில் வரும் காட்சியில் ரீ- கிரியேட் செய்யப்படுகின்றன.
அவர்களின் நடிப்பு மற்றும் தன்னுடைய துணையை நடத்து விதங்கள் அனைத்தையும் பொறுத்து நடுவர்கள் நிகழ்ச்சியை கொண்டு செல்வார்கள்.
அப்படி நிகழ்ச்சிக்காக ஜோடியானவர்களான கூமாபட்டி தங்கபாண்டி- சீரியல் நடிகை சாந்தினி இருவரும் சமூக வலைத்தளங்களில் பிரபல ஜோடியாக வலம் வருகிறார்கள்.
போட்டியாக களமிறங்கிய பிரபலம்
இந்த நிலையில், சிங்கிள் பசங்க நிகழ்ச்சியை இதுவரையில் தொகுப்பாளினி மணிமேகலை தான் தொகுத்து வழங்கி வந்தார். இதனால் இவருக்கு ஜோடியாக இன்னொரு துணை தொகுப்பாளர் வந்தால் நன்றாக இருக்கும் என நடுவர்கள் முடிவு செய்து, அதனை ஆல்யா மானசா அறிவிக்கிறார்.
இது குறித்து கூறும் பொழுது, “உன்னை விட நன்றாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நபர் ஒருவர் வரப்போகிறார்..” என்கிறார். அதனை கேட்டதும் மணிமேகலை கொஞ்சம் ஆர்வம் அதிகமாகி விட்டது.
கடைசியாக தொகுப்பாளர் மேடைக்கு அழைத்த பொழுது மணிமேகலை பார்த்து அதிர்ந்து போகிறார். ஏனெனின் நிகழ்ச்சியின் துணை தொகுப்பாளராக களமிறங்கியது அவரது கணவர் உசைன் தான்.
ஒரே பாடலில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் இவர்கள் கடந்த வாரம் செய்த ஒரு வேலையால் இணையவாசிகளிடையே விமர்சனங்களை பெற்றுக் கொண்டனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |