கணவரின் காலில் விழுந்த மணிமேகலை....நம்பாத உசைன்! இறுதியில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி
குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை சமீபத்தில் தனது கணவரின் பிறந்தநாளைக் கொண்டாடி அவருக்கு சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
தனியார் டிவி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல வருடங்களாக பணியாற்றி பிரபலம் ஆனவர் மணிமேகலை.
இந்நிலையில் விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் அவரும் ஒரு போட்டியாளராகக் கலந்துகொண்டு கலக்கினார்.
சமீபத்தில் கணவரின் விலையுயர்ந்த கே டி எம் பைக் காணாமல் போயுள்ளதாகக் கூறியிருந்தார். இது சம்மந்தமாக அவர்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
மேலும் திருடர்கள் வந்துபோகும் சிசிடிவி புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தனர். ஆனாலும் இதுவரை பைக் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மணிமேகலை தனது கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்காக புதிய BMW பைக் ஒன்றை புக் செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
இதை அவர் தன் கணவரிடம் சொல்ல அவர் முதலில் நம்பவே இல்லை. மணிமேகலை எவ்வளவோ சொல்லியும் அவர் நம்பாததால், ஒரு கட்டத்தில் மணிமேகலை “உன் காலில் வேணாலும் விழுறேன். நம்புப்பா” என சொல்கிறார்.
பின்னர் பைக் புக் பண்ணியவர்களிடம் போன் பண்ணி சொன்னதும்தான் உசைன் அதை நம்பினார். பின்னர் மணிமேகலைக் கொடுத்த சர்ப்ரைஸால் உணர்ச்சிவசப்பட்டு இருவரும் அவரைக் கட்டிப்பிடித்து அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.
இது சம்மந்தமான வீடியோவை இணையத்தில் மணிமேகலை பகிர அது வைரலாகியுள்ளது.