பச்சை மாங்காய் பானத்தை நீரிழிவு நோயாளிகள் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா?
பச்சை மாங்காயுடன் சீரகம் சேர்த்து தயாரிக்கப்படும் பானம் வெயிலுக்கு மிகவும் உகந்த ஒன்று.
இதனை நீரிழிவு நோயாளிகள் சற்று எடுத்து கொள்ள அச்சம் கொள்வார்கள்.
எனினும், இது ஆரோக்கிய பானம் என்பதால் அளவாக எடுத்து கொண்டு அதன் பலன்களை பெற்று கொள்ளுங்கள்.
தேவையான பொருள்கள்
- பச்சை மாங்காய் - 1
- சீரகத் தூள் - 1 ஸ்பூன்
- புதினா - ஒரு கைப்பிடி
- பச்சை மிளகாய் - 1
- சிறியது உப்பு - சிறிது
செய்யும் முறை
பச்சை மாங்காயை பொடிப் பொடியாக நறுக்கி, அதனுடன் உப்பு, மிளகாய், புதினா சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்து அதனுடன் ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் வரையிலும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இதை வடிகட்டி, அதனுடன் சீரகத் தூள் சேர்த்தால் பானம் ரெடி.
கூடுதல் சுவை தேவைப்பட்டால் சிலர் சாட் மசாலா சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.
நீரிழிவு நோய் மற்றும் ரத்தத்தில் உயர் சர்க்கரை அளவை எதிர்த்து போராட உதவுகிறது.
இரத்தத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தியைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. மாங்காயில் கிளைசெமிக் குறியீட்டு எண் மிக மிகக் குறைவு. எனவே நீரிழிவு நோயாளிகள் இதனை அச்சமின்றி எடுத்து கொள்ளலாம்.
காலை வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிங்க! உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்