நீரிழிவை நெருங்க விடாது தடுக்கும் இயற்கை பானம்... 5 நிமிடத்தில் தயாரிப்பது எப்படி?
நீரிழிவு பிரச்சினையை கட்டுப்படுத்த நம்முடைய வீட்டிலுள்ள சின்ன சின்ன மசாலா பொருள்களு போதும்.
அவற்றில் ஒன்று தான் பூண்டு.
பூண்டு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட உணவுப் பொருள். இதை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும்.
நீரிழிவை கட்டுப்படுத்தும் பூண்டு குடிநீர் செய்வது எப்படி?
தேவையான பொருள்கள்
- பூண்டு - 6 பல்
- தண்ணீர் - 300 மில்லி
- சீரகம் - ஒரு சிட்டிகை
செய்முறை
முதலில் 300 மில்லி தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் தோலுரித்து, ஒன்றிரண்டாகத் தட்டி வைத்திருக்கும் பூண்டையும் முழு சீரகத்தையும் அதில் போட்டு இரண்டு நிமிடங்கள் மட்டும் மிதமான தீயில் கொதிக்க வைத்து, பின் அடுப்பை அணைத்து விடுங்கள்.
அந்த பாத்திரத்தை ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்து பார்த்தால் பூண்டு சாறும் சீரகத்தின் தன்மையும் தண்ணீரிர் இறங்கியிருக்கும்.
பூண்டின் காரத்தன்மையும் வாசனையும் நிறைய பேருக்குப் பிடிக்காது. அதை மட்டுப்படுத்த தான் சீரகம் சேர்க்கிறோம். தேவையில்லையென்றால் சேர்க்க வேண்டாம்.
இந்த நீரை இப்போது வடிகட்டி காலையில் ஒரு கப் அளவுக்குக் குடிக்கலாம். வெதுவெதுப்பாக குடிப்பது நல்லது.