மாம்பழ தோலை தூக்கி வீசுபவர்களா நீங்கள்?.. அதுல மறைந்திருக்கும் ரகசியம் என்னென்ன தெரியுமா?
பொதுவாக பெரும்பாலும் மாம்பழத்தின் உள் இருக்கும் கூழ் பகுதியை மட்டும் சாப்பிட்டு அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவார்கள். ஆனால் இவற்றிலும் உடலுக்கு வேண்டிய ஆரோக்கியம் நிறைந்துள்ளது.
மாம்பழம் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே, ஃபோலேட், மெக்னீசியம், பொட்டாசியம், கோலைன் போன்றவற்றின் ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
மாம்பழம் சாப்பிடும் போதெல்லாம் அதன் தோலை நீக்கி உள்ளிருக்கும் கூழ் போன்ற பகுதியை மட்டுமே சாப்பிடுவது வழக்கம். மாம்பழத்தின் உள் இருக்கும் பகுதியை மட்டும் சுவைத்து தோல் பகுதியை வீசி எறிவதுண்டு.
ஆனால் மா தோல்களை உங்கள் உணவில் சேர்க்கலாம். மேலும், மாம்பழத்தின் உள்புறம் இருக்கும் சதைப்பற்றை விட மாம்பழ தோல் பல நோய்களை போக்க உதவுகிறது.
மாம்பழத்தோலில் அதன் சதைப்பறை விட அதிக ஆன் டி ஆக்ஸிடண்ட் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
மாம்பழத்தோல் வைட்டமின்கள், கரோட்டினாய்டுகள், பாலிபினால்கள் ஆகியவற்றின் மூலமாகும். மாம்பழத்தில் தாவரங்களில் காணப்படும் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் நிறைந்துள்ளது.
இது இதய ஆரோக்கியத்துக்கு நல்லது. மேலும் மாரடைப்பு, பக்கவாதம், இதய பிரச்சனைகளை தடுக்கிறது. அதுமட்டுமில்லாமல் அதிக நார்ச்சத்து இருப்பதால் இதய பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.
மாம்பழத்தில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இதய பிரச்சனைகளை தடுக்க செய்கிறது. ஹார்வர்ட் ஆய்வின் படி, நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணும் நபர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 40% குறைவாக இருக்கும்.
தோல் நிறம் மாறும் பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட அவர்கள் மாம்பழத்தோலை பயன்படுத்தலாம்.