இனி மாம்பழத்தை சருமத்துக்கும் உபயோகிக்கலாம்!
முக்கனிகளில் முதன்மையானது, மாம்பழம். மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதன் தனித்துவமான சுவை மற்றும் மணம் அனைவரையும் சுண்டி இழுத்துவிடும்.
மாம்பழம் உண்ணுவதற்கு மட்டும் அல்ல, சரும அழகை மேம்படுத்தவும் உதவுகின்றது.
ஒரு பாத்திரத்தில் மாம்பழக் கூழை போட்டு, அதனுடன் இரண்டு தேக்கரண்டி கடலை மா, அரை தேக்கரண்டி தேன், அரைத்த பாதாம் சேர்த்து முகத்தில் பூச வேண்டும். பூசி கால் மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்யும்போது சருமத்தில் நல்ல மாற்றம் தெரியும்.
மாம்பழத்தின் தோலை நன்றாக காயவைத்து பொடியாக்கி, அதனுடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகத்திலுள்ள சுருக்கங்கள் நீங்கும்.
மாம்பழத்தின் தோல் மற்றும் விதையை நீக்கிவிட்டு மாம்பழத்தை கூழாக அரைத்து முகத்தில் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் தோலின் நிறம் சீராகக் காணப்படும்.