தோசை, சப்பாத்திக்கு சூப்பரான காம்பினேஷன் என்ன தெரியுமா? இது உங்களுக்கான டிப்ஸ்..
பொதுவாக சிக்கன் என்றாலே அனைவராலும் விரும்பி உண்ணும் உணவாகும். இதனை பயன்படுத்தி நிறைய வகையான உணவுகளை செய்யலாம்.
அந்த வகையில் தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ள அருமையான மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் எவ்வாறு செய்வது குறித்து தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- சர்க்கரை - 1 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 2 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1 டீஸ்பூன்
- சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- வரமிளகாய் - 2
- கெட்டியான புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- அரைத்த தக்காளி - 1 கப்
- நெய் - 7 டேபிள் ஸ்பூன் + 2 டீஸ்பூன்
- கொத்தமல்லி - 1/2 கப் (நறுக்கியது)
- கறிவேப்பிலை - சிறிது
தயாரிப்பு முறை
முதலில் சிக்கன் உட்பட அனைத்தையும் நன்றாக சுத்தம் கொள்வது அவசியமாகும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் நன்றாக சூடாகிய பிறகு அதில் நெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, வரமிளகாய், சீரகப் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள்.
தாளிப்புடன் தக்காளி பேஸ்ட், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து, நெய் தனியாக பிரியும் வரை நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
தாளிப்புக்கு பின் சிக்கன் துண்டுகள், உப்பு, கரம்மசாலா மற்றும் மிளகுத்தூள் அதனுடன் சேர்த்து நன்கு 5-6 நிமிடம் கிளறி விடுங்கள். கிளரிய பின்னர் 1/2 கப் கொத்தமல்லியைத் தூவி, சர்க்கரை சேர்த்து பிரட்டி, மூடி வைத்து குறைவான தீயில் 10 நிமிடம் வேக விட வேண்டும். அதனுடன் புளி பேஸ்ட் சேர்த்து, மீண்டும் மூடி வைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
தற்போது ஆவலுடன் எதிர்பார்த்த மங்களூர் ஸ்பெஷல் சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்!