தாலி கயிற்றை எந்த கிழமையில் மாற்ற வேண்டும்? இந்த நேரம் மாற்றினால் சிறப்பாம்
பெண்கள் அணியும் தாலி கயிற்றினை வருடத்திற்கு இரண்டு முறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகின்றது. அதிலும் குறிப்பாக ஆடிப்பெருக்கு நாளில் மாற்றுவது சிறப்பு.
தாலையை எந்த கிழமை மாற்றலாம்?
இந்து மக்களின் புனிதமாக கருதப்படுகின்றது தாலி. தாலியை மஞ்சள் கயிற்றிலும், சில வசதியுள்ளவர்கள் தங்க செயினிலும் அணிந்து வருகின்றனர்.
ஆனல் மஞ்சள் கயிற்றில் அணிந்திருப்பவர்கள் வருடத்திற்கு 2 முறையாவது தாலி கயிற்றினை நிச்சயமாக மாற்ற வேண்டுமாம். அதிலும் ஆடிப்பெருக்கில் மாற்றுவது மிகவும் சிறப்பாகும்.
அந்த நாளை தவிர வேறு எந்த நாட்களில் மாற்றலாம் என்ற சந்தேகம் பல பெண்களிடம் இருக்கும். அதற்கான பதிலை இங்கு காணலாம்.
அதாவது பெண்கள் தாலியை மாற்றும் போது, நாள் மற்றும் கிழமை கட்டாயம் பார்க்க வேண்டுமாம். அந்த வகையில், சுபமுகூர்த்த நாள், மேல்நோக்கு நாள், சித்த யோகம், அமிர்த் யோகம் அனைத்தும் கூடி வரும் நாளில் தாலி கயிற்றினை மாற்ற வேண்டுமாம்.
அதே போன்று கயிறு மங்களலாகும் போது மட்டுமே அதனை மாற்ற வேண்டும். மேலும் திங்கள், செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே தாலி கயிற்றை மாற்ற வேண்டும்.
தாலி கயிறு மாற்றும் போது திசையும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அதாவது கிழக்கு நோக்கி அமர்ந்தே தாலியை மாற்ற வேண்டும். அதுமட்டுமில்லாமல் கணவர், சுமங்கலியாக இருக்கும் பெண்கள், மாமியார், அம்மா என இவ்வாறு வயதானவர்கள் உடனிருக்கும் போதே தாலியை மாற்றவும்.
அதே போன்று தாலிக்கயிறு மாற்றும் போது பாதியிலேயே எழுந்திருக்க கூடாது. தேவையான பொருட்கள் அனைத்தையும் அருகில் வைத்து கொண்டு தான் மாற்ற வேண்டும்.
திருமாங்கல்யம், மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றை ஒரு தட்டில் எடுத்து அருகில் வைத்து கொள்ள வேண்டும்.
கர்ப்பமாக இருக்கும் தாலி கயிற்றை மாற்றக்கூடாது. பிரசவம் ஆன பிறகே மாற்ற வேண்டும். காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளித்து தாலி கயிறை மாற்றி, தாலிக்கு பூ, மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும்.
பின்னர் பூஜை அறைக்கு சென்று வணங்கிவிட்டு அதன் பின்னரே மற்ற வேலைகளை செய்ய வேண்டும்.” என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |