வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தாகும் மணத்தக்காளி வத்த குழம்பு! இப்படி செய்து கொடுங்க
பொதுவாக கிராமங்களில் அதிகளில் கிடைக்கூடிய ஒரு காய்கறி வகை தான் இந்த மணத்தக்காளி. அதனை வெயிலில் உலர்த்தி மணத்தக்காளி வத்தல் தயாரிக்கப்படுகின்றது.
இது பார்ப்பதற்கு சிறிய காய் வடிவில் காணப்படுகின்ற போதிலும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும், மருத்துவ குணங்களையும் தன்னக்தே கொண்டுள்ளது.

குறிப்பாக வயிற்றிலும் குடற்பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் ஆற்றல் மணத்தக்காளியில் நிறைந்து காணப்படுகின்றது. வாய்ப்புண் ஏற்பட்டதுமே கிராமங்களில் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளி தான்.
இதன் கீரை மற்றும் பழங்கள் இரண்டுக்கும் வயிற்றுப் புண் மற்றும் வாய்ப்புண்களுக்கு அருமருந்தாகும். மேலும் நுரையீரல் தொடர்பான பிரச்னைகளுக்கும் மணத்தக்காளி சிறந்த தீர்வாகும்.

சிறுநீர் பெருக்கை அதிகரித்து, சிறுநீர்ப்பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும் ஆற்றல் அதில் காணப்படுகின்றது.
இவ்வளவு ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ள மணத்தக்காளி வத்தலை கொண்டு அசத்தல் சுவையில் நாவூரும் சுவையில் காரசாரமான வத்தல் குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மணத்தக்காளி வத்தல்- 2 அல்லது 3 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம்: 1 கப் (நறுக்கியது)
பூண்டு: 10 பற்கள்
மஞ்சள் தூள்: ¼ தே.கரண்டி
வெல்லம்: ஒரு சிறிய துண்டு
நல்லெண்ணெய்: 2-3 மேசைக்கரண்டி
கடுகு, உளுந்து, வெந்தயம்: சிறிதளவு
கறிவேப்பிலை: சிறிதளவு
தக்காளி: 1 (நறுக்கியது)
புளி: ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு (ஊறவைத்து கரைத்தது)
மிளகாய் தூள்: 1-2 தே.கரண்டி
மல்லித் தூள்- 1-2 தே.கரண்டி

செய்முறை
முதலில் மணத்தக்காளியை சிறிது எண்ணெயில் போட்டு சில நொடிகள் வறுத்து தனியாக தனியாக எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். ( வறுக்க தேவையில்ல என்றால் நேரடியாகவும் பயன்படுத்தலாம்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, அதில், அது சூடான பின்பு கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் தட்டிய பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் கண்ணாடி பதத்துக்கு வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து, அது நன்கு மசியும் வரை வதக்கி மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்று வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில், கரைத்த புளித் தண்ணீரை ஊற்றி, வறுத்த மணத்தக்காளி வத்தல், தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து, நன்றாக கலந்துவிட்டு குழம்பு கெட்டியாகும் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும் வரை மிதமான தீயில் கொதிக்க விட்டு இயக்கினால் அவ்வளவு தான் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் மணத்தக்காளி வத்த குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |