நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து Manager விளக்கம்- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
நடிகர் விஷாலின் உடல்நிலை குறித்து அவரின் மேலாளர் விளக்கமளித்துள்ளார்.
மத கஜ ராஜா திரைப்படம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால்.
இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் “மத கஜ ராஜா” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஒரு சில காரணங்களால் திரைக்கு வராமல் இருந்தது.
இந்த திரைப்படத்தில்இ விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனுசூட், அஞ்சலி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
இதையடுத்து மத கஜ ராஜா திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியானது ஆனாலும் படம் வெளியாகவில்லை.
பிரமோஷன் நிகழ்ச்சியில் வெளியான காணொளி
இந்த நிலையில், மத கஜ ராஜா திரைப்படம் எதிர்வரும் 12-ந்தேதி பொங்கலையொட்டி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தற்பொழுது தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. சென்னையில் சமீபத்தில் நடைப்பெற்ற ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சுந்தர் சி, விஜய் ஆண்டனி, விஷால், குஷ்பு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஷாலின் தோற்றமே ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய விஷால் குரல் நடுக்கத்துடன், பேச்சில் தடுமாற்றம் மற்றும் கையால் மைக்கை கூட சரியாக பிடிக்க முடியாத நிலை காணக்கூடியதாக இருந்தது. இந்த காணொளியை தொடர்ந்து இணையத்தில் விஷாலின் மீது அதிகமான சர்ச்சையான கருத்துக்களை எழுந்தன.
இதனை தொடர்ந்து, விஷால் தரப்பில் இருந்து, அவருக்கு அதிகப்படியான வைரல் காய்ச்சல் ஏற்பட்டதால் தான் இவ்வாறு ஆனது என மருத்துவர் கொடுத்த சான்றிதழுடன் செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்தனர்.
Manager கொடுத்த விளக்கம்
இந்த நிலையில், நடிகர் விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளிவந்தன. ஆனால் இதற்கு விஷாலில் Manager ஹரி கிருஷ்ணன் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, "விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் வதந்தி. மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். காய்ச்சல் வந்த காரணத்தினால் உடல் வலி மற்றும் சற்று சோர்வாக காணப்படுகிறார். ஓரிரு நாட்களில் விஷால் முழுமையாக குணமடைந்து விடுவார்” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதற்கு பின்னர் விஷால் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் முடிவுக்கு வரும் என அவரின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |