நோயால் அவதிப்பட்ட சமந்தா.. பல கோடி ரூபாயை அபேஸ் செய்த மேனேஜர்!
நடிகை சமந்தாவின் மேனேஜர் அவரின் பணத்தை திருடி மோசடி செய்ததாக புதிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.
இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
அந்த வகையில் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படம் நடித்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு திரைப்படத்தை பிரமோஷன் செய்து வருகின்றார்.
நோயிலிருந்த போது நடந்த கொடுமை
இந்த நிலையில் சமந்தா சினிமாவிற்குள் வந்த போதிலிருந்து நீண்ட காலமாக குறிப்பிட்ட ஒரு நபரை மேனேஜராக வைத்துள்ளார்.
அவரை கண்மூடித்தனமாக நம்பி பணம் தொடர்பான விடயங்களை அவர் பொறுப்பில் விட்டு விட்டாராம். ஆனால் அவர் சமந்தாவை ஏமாற்றி 1 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டாராம்.
இது குறித்து சமந்தா கவலை வெளியிட்டுள்ளார். உடம்பு சரியில்லாமல் இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இதனை பார்த்த சமந்தா ரசிகர்கள் குறித்த மேனேஜர் மீது கொந்தளித்துள்ளார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |