தமிழ் சினிமாவில் மற்றுமொரு இழப்பு.. இறுதிசடங்கு நடக்கவில்லையா?
நடிகர் பிரபுதேவா பட இயக்குநர் நாராயணமூர்த்தி காலமானதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த வருடங்களில் தமிழ் சினிமா திறமை வாய்ந்த கலைஞர்களை இழந்து வருகிறது.
அந்த வகையில், கடந்த நாட்களில் யாரும் எதிர்பாராத வகையில் ரோபோ சங்கரின் இழப்பு எம்மை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா பட இயக்கிய நாராயணமூர்த்தி (59) மாரடைப்பால் காலமானதாக செய்தி வெளியாகியுள்ளது.
இவர், மனதை திருடிவிட்டாய், ஒரு பொண்ணு ஒரு பையன் ஆகிய திரைப்படங்களையும், நந்தினி, ராசாத்தி ,ஜிமிக்கி கம்மல், அன்பே வா, மருமகளே வா ஆகிய தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
உயிரிழப்பு
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக உடல்நிலை குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு 8.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் காலமானார்.
தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலமாக இருக்கும் இவரின் மனைவி அம்சவேணி மற்றும் அவருடைய மகன் லோகேஸ்வரன் இருவரும் லண்டனில் இருப்பதால் அவருடைய உடல் இறுதிச் சடங்கில் வைக்கப்படாமல் தனியார் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மகன் இந்தியாவிற்கு வந்த பின்னர் நாளைய தினம் (27.09.2025) பம்மலில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கிற்காக வைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
