சமைக்கும் போது சப்பாத்தியில் எச்சில் துப்பி அதிர்ச்சியை ஏற்படுத்திய சமையல்காரர்! லீக்கான வீடியோவால் பதறி போன நெட்டிசன்கள்
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள சாலையின் அருகே உள்ள ஓட்டலில் சமையல்காரர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சமைப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டல் சமையல்காரர் சப்பாத்தியை சுடுவதற்கு முன்னர் அதில் எச்சில் துப்பவுதும் அதை சமைப்பதும் போல வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச மாநில போலீசார் விசாரணை நடத்தியதில் ஓட்டல் சமையல்காரர் தமீசுதீன் என்பவரை கைது செய்தனர்.
गाजियाबाद के एक चिकन पॉइंट का वीडियो सामने आया है, जिसमें एक शख्स थूक लगाकर रोटी बनाता दिख रहा है. pic.twitter.com/utDi9Jh9F8
— Anubhav Veer Shakya (@AnubhavVeer) October 17, 2021
கைது செய்யப்பட்ட தமீசுதின் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோக்களை இணையவாசிகள் பகிர்ந்து அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதேவேளை, இதற்கு முன்னாக ரஸ்க்கு பிஸ்கட்டுகளை காலால் மிதித்து நபர் ஒருவர் பொதி செய்த காட்சி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.