நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரருக்கு 93 வயதில் திருமணம்!
நிலவில் கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர்களில் ஒருவரான பஸ் ஆல்ட்ரின், தன், 93வது வயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா'வில் பணியாற்றிய ஆல்ட்ரின், 1971ல் ஓய்வு பெற்றார். விண்வெளி ஆய்வு தொடர்பாக தனியாக ஒரு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
சமீபத்தில் 93வது பிறந்த நாளை இவர் கொண்டாடினார்.
திருமணம்
இதன்போது அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி வரும் அன்கா பார், 63, என்ற பெண்ணுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் நான் 93 வயதில் என் நீண்ட நாள் காதலியை திருமணம் கொண்டேன். நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
புதிதாக திருமணம் செய்த இளம் வயதினர் எப்படி மகிழ்ச்சியாக இருப்பரோ, அதேபோல் நாங்களும் மகிழ்ச்சியாக உள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும் பஸ் ஆல்ட்ரின் ஏற்கனவே மூன்று பெண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.