இவர் அணிந்திருக்கும் மாஸ்க் எத்தனை லட்சம் தெரியுமா? வாயடைத்துப் போன மக்கள்
நாடு முழுவதும் கொரோனா பரவல் இரண்டாவது அலையாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது.
மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது தவறாமல் மாஸ்க் போட வேண்டுமென்று பலராலும் அறிவுறுத்தப்பட்டனர் .
அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்க் அணிவது என்பது அத்தியாவசியமான ஒன்றாக ஆகிவிட்டதால், பலரும் வித்தியாசமான, டிசைன் டிசைனாக மற்றும் அதிநவீன மாஸ்க்குகளை அணிந்து வருகின்றனர்.
இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த மனோஜ் ஆனந்த் என்ற நபர் முழுவதும் தங்கத்தினால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மாஸ்க் அணிந்து வலம் வருகின்றார். இதன் மதிப்பு மட்டும் ஐந்து லட்சமாம்.
இதனால் ஊர்க்காரர்கள் அனைவரும் அவரை கோல்டன் பாபா என்று அழைத்து வருகின்றனராம். இந்நிலையில் அவர் தனக்கு தங்கத்தின் மீதிருக்கும் மிகுந்த ஈர்ப்பின் காரணமாகவே இவ்வாறு தங்கத்தில் மாஸ்க் அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
