Viral Video: லண்டன் தேம்ஸ் நதியில் காலை கழுவிய இந்தியர்
சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில் லண்டன் தேம்ஸ் நதியில் இந்தியர் ஒருவர் தன்னுடைய கால்களை கழுவுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியான சில மணிநேரங்களில் வைரலாக, பலரும் குறித்த நபரின் செயலுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
”இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் ஒருசாரார், இது இந்தியாவில் சாதாரணமான ஒன்று தான், இந்தியரின் பழக்கவழக்கம் என ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக, கனடாவில் உள்ள நதியொன்றில் இந்திய குடும்பம் ஒன்று குளிப்பது போன்ற வீடியோ வெளியானது.
தொடர்ந்து குறித்த வீடியோக்களால் இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிப்பது குறிவைக்கப்படுவதாகவும் பலரும் கருத்துகளை கூறிவருகின்றனர்.